உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்தியவழி நடப்போம்

சத்தியவழி நடப்போம்


 ‘கல்வி காணாமல் போன ஒட்டகம். அதைத் தேடிக் கண்டறியுங்கள்’  ‘சீனா சென்றாவது சீர்தரும் கல்வியைத் தேடுங்கள்’ என்பது நாயகத்தின் அறிவுரைகள்.
முஆது என்னும் தோழரை ஏமன் நாட்டுக்குத் தன் பிரதிநிதியாக அனுப்பினார் நாயகம். அப்போது அங்கே ஏதும் பிரச்னை வந்தால் எப்படி சமாளிப்பீர்கள் எனக் கேட்க “குர்ஆன் விளக்கங்களை அறிந்து தீர்வு காண்பேன்” என்றார் முஆது.
‘‘தீர்வு கிடைக்காமல் போனால்....’’ எனக் கேட்டார்.
 “உங்கள் சொல், செயல்களில் இருந்து விளக்கம் அறிந்து பிரச்னைகளைத் தீர்ப்பேன்” என்றார்.
‘அதிலும் கிடைக்காவிட்டால்...’ என்றார்.
“இந்த இரண்டின் அடிப்படையோடு புத்தியை பயன்படுத்தி தீர்வு காண்பேன்” என்றார்.  
 “சத்தியத்தின் பக்கம் இருக்கிறீர்” என பதிலளித்து மகிழ்ந்தார்.  
கல்வியைத் தேடி ஒருவன் புறப்படுகிறான் என்றால் இறைவனின் பாதையில் பயணம் செய்கிறான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !