கவலை தீர்க்கும் மருந்து
ADDED :1946 days ago
சாலையில் நடந்த நபிகள் நாயகம் அழுதபடி ஒரு பெண் நிற்பதைக் கண்டார்.
‘‘ பொறுமையுடன் இருந்தால் எல்லாம் நன்மையாக நடக்கும்’’ என அவளுக்கு ஆறுதல் கூறினார்.
‘‘என்னைப் போல கஷ்டம் யாருக்கும் வந்திருக்காது. என் நிலை தெரிந்தால் இப்படி சொல்ல மாட்டீர்கள்’’ என்றாள் அவள்.
ஏதும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார்.
அதன் பின் தனக்கு அறிவுரை சொல்லியவர் நாயகம் என்பதை அறிந்து ஓடி வந்தாள்.
‘‘தாங்கள் யார் என உண்மையை அறியாமல் பேசி விட்டேன்’’ என வருந்தினாள்.
‘‘துன்பம் ஏற்பட்டால் பொறுமையுடன் இருப்பதே நல்லது’’ என மீண்டும் அவளுக்கு அறிவுரை கூறியனுப்பினார்.