அன்பால் அந்தஸ்து உயரும்
ADDED :1936 days ago
ராஜா ஒருவர் பிறந்தநாள் கொண்டாடினார். படை வீரர்களுக்கு பரிசளிக்க விரும்பினார். அவர்களை வரவழைத்து பொக்கிஷ அறைக்குச் சென்று தேவையானதை எடுக்க உத்தரவிட்டார். அங்கிருந்த தங்கம், வெள்ளி, முத்து, வைரம், வைடூரியம் என அனைத்தையும் எடுத்துச் சென்றனர். அப்போது ஒரு வீரன் மட்டும் வேடிக்கை பார்த்தபடி நின்றான். அவனிடம், ‘‘நீ எதுவும் எடுக்கவில்லையா...’’ எனக் கேட்டார் ராஜா.
ராஜாவின் காலில் விழுந்த வீரன், ‘‘ பணத்தை பெரிதாக மதிக்கும் இவர்கள் ஓடினால் போகட்டும். ஆனால் எனக்கு தங்களை பிரிய மனமில்லை. பொன், பொருள் எல்லாம் காணாமல் போகும். ஆனால் அன்பு என்றும் மாறாது’’ என்றான்.
அவனை அணைத்துக் கொண்ட ராஜா, அந்தஸ்து மிக்க மனிதராக மந்திரி பதவியில் அமர்த்தினார்.
இவனைப் போல அன்பு செலுத்த தொடங்கினால் நம் வாழ்வு உயரும்.