வரவு செலவு பெருமாள்
                              ADDED :1858 days ago 
                            
                          
                           
திருப்பதியில் பெருமாள் ஐந்து கோலங்களில் காட்சியளிக்கிறார். வெங்கடாஜலபதி, மலையப்பர், உக்ர சீனிவாசர், போக சீனிவாசர், கொலுவு சீனிவாசர். இவர்களை ‘பஞ்ச பேரர்’ என குறிப்பிடுவர். மூலவர் கருவறையில் நின்ற கோலத்தில் சங்கு சக்கரம் ஏந்தியபடி அருள்பாலிக்கிறார். புரட்டாசி பிரம்மோற்ஸவம் உள்ளிட்ட விழாக்களில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வீதி உலா வருபவர் மலையப்பர். இவருக்கே தினமும் திருக்கல்யாணம் நடக்கும். இவரை மலைக்கினிய பெருமாள் என்றும் அழைப்பர். உக்ர சீனிவாசர் கார்த்திகை மாதம் துவாதசியன்று மட்டும் அதிகாலையில் உலா வருவார். மற்ற நாட்களில் தரிசிக்க முடியாது. வெள்ளியால் செய்யப்பட்ட போக சீனிவாசருக்கு அன்றாட அபிஷேகம் நடக்கும். இவரே இரவு பள்ளியறை பூஜைக்கு செல்பவர். கொலுவு சீனிவாசர் என்பவரிம் கோயிலின் அன்றாட வரவு, செலவு கணக்கை அதிகாரிகள் சமர்ப்பிப்பர்.