உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேட்டை முப்பிடாதி அம்பாள் கோயிலில் இன்று கொடை விழா

பேட்டை முப்பிடாதி அம்பாள் கோயிலில் இன்று கொடை விழா

திருநெல்வேலி : பேட்டை செக்கடி முப்பிடாதி அம்பாள் கோயிலில் இன்று (22ம் தேதி) கொடை விழா நடக்கிறது. பேட்டை செக்கடியில் நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்பிடாதி அம்பாள் கோயில் உள்ளது. இந்த கோயில் கொடை விழா நேற்று துவங்கியது. நேற்று மாலை 6 மணிக்கு குடியழைப்பு, மாகாப்பு அலங்காரம், வில்லிசை நடந்தது. இன்று (22ம் தேதி) காலை 8 மணிக்கு பால்குடம் வீதியுலா, மதியம் 12 மணிக்கு பால் அபிஷேகம், ஆராதனை, மாலை 4 மணிக்கு கிரகம் வீதியுலா, நள்ளிரவு 12 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், படப்பு சாமகொடை தீபாராதனை நடக்கிறது. முன்னதாக இரவு 8 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை பேட்டை செக்கடி முப்பிடாதி அம்பாள் கோயில் கொடை விழாக் குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !