உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் பெருமாள் கோவிலில் 25ம் தேதி கும்பாபிஷேகம்

திண்டிவனம் பெருமாள் கோவிலில் 25ம் தேதி கும்பாபிஷேகம்

திண்டிவனம்:திண்டிவனம் நகரில் உள்ள பழமை வாய்ந்த லஷ்மி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 25ம் தேதி நடக்கிறது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள மூலவர் சன்னதி எதிரில் இருந்த மண்டபம் புதுப்பித்து கட்டப்பட்டது. மேலும் ராஜகோபும், மூலவர் கோபுரம், கனகவல்லி தாயார் சன்னதி கோபுரம், ஆண்டாள் சன்னதி கோபுரம் ஆகியவை சீரமைக்கப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டது. சிதிலமடைந்திருந்த சுற்று சுவர் புதிதாக கட்டப்பட்டது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 23ம் தேதி காலை 9 மணிக்கு யாக சாலை நிர்மானம் செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம், அக்னி பிரதிஷ்டை மற்றும் கும்ப ஸ்தாபனம் நடக்கிறது. மறுநாள் 24ம் தேதி காலை 8 மணிக்கு மகா சாந்தி ஹோமம் நடக்கிறது. பின்பு அஷ்டபந்தனம் சமர்ப்பித்தல் நடக்கிறது. மாலை 3 மணிக்கு கும்ப புறப்பாடு, மகா சாந்தி திருமஞ்சனம் நடக்கிறது. இதனையடுத்து 25ம் தேதி காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 8 மணிக்கு கும்ப பிம்ப புறப் பாடும் நடக்கிறது. தொடர்ந்து 9 மணிக்கு கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !