கீதை காட்டும் பாதை
ADDED :1834 days ago
ஸ்லோகம்:
அந்நாத் ப வந்தி பூதாநி
பர்ஜந்யாத ந்நஸம்ப வ:!
யஜ்ஞாத் ப வதி பர்ஜந்யோ
யஜ்ஞ: கர்மஸமுத் ப வ:!!
கர்ம ப்ரஹ்மோத் ப வம் வித்தி
ப் ரஹ்மாக்ஷரஸமுத் ப வம்!
தஸ்மாத்ஸர்வக தம் ப் ரஹ்ம
நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டி தம்!!
உணவால் உயிரினங்கள் எல்லாம் வாழ்கின்றன. மழையால் பூமியில் உணவு உற்பத்தியாகிறது. வேள்வியின் பலனாக மழை பொழிகிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட கர்மங்களால் வேள்விகள் நடக்கின்றன. கர்மங்களின் தொகுப்பு வேதங்களில் உள்ளது. வேதங்களோ கடவுளிடம் இருந்து தோன்றியது. எனவே எங்கும் நிறைந்த பரம்பொருள் வேள்வியில் நிலைத்திருக்கிறார்.