சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி உற்வசம்: பிரமாண்ட கொலு
ADDED :1822 days ago
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலு வைக்கப்பட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற நடராஜர் கோவிலில் நவராத்திரி உற்வசம் தொடங்குதையொட்டி நேற்று பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. 21 அடி உயரமும் 20 அடி அகலம் கொண்ட கொலுவில் 21 படிகள் அமைக்கப்பட்டு சுமார் 2500 முதல் 3000 வரையிலான பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. சுவாமி பொம்மைகள் மற்றும் ஓருயிர் முதல் 6 அறிவுள்ள அனைத்து உயிரினங்களின் பொம்மைகளும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இந்த பிரமாண்ட கொலுவை பார்த்து பரவசத்துடன் செல்கின்றனர்.