கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ஆழ்வார் உற்சவம்
ADDED :1818 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ஆழ்வார் உற்சவம் நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி புண்டரீகவள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஆழ்வார் உற்சவம் கடந்த 13ம் தேதி துவங்கியது. தொடர்ந்து தினமும் மாலையில் பெருமாள், தாயார், ஆழ்வார் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது. உற்சவர்களை கோவில் உட்பிரகாரம் வலம் வந்த பின், மண்டபத்தில் எழுந்தருள செய்தனர்.பகவத்சங்கல்பம், சாற்றுமுறை, சேவை ஆகியவற்றிற்கு பின் சோடச தீப அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியினை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை தேசிகபட்டர் செய்து வைத்தார்.