உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை ஐப்பசி பூரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை ஐப்பசி பூரம்

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை(நவ.,10) ஐப்பசி பூரம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு மூலவர், உற்ஸவர் அம்மனுக்கு ஏத்தி இறக்குதல் சடங்கு நடக்கிறது.

கோலாட்ட உற்ஸவம்நவ., 15 முதல் 20 வரை கோலாட்ட உற்ஸவம் நடக்கிறது. இதை முன்னிட்டு நவ.,15 முதல் 18 வரை மாலை 6:00 மணிக்கு அம்மன் ஆடி வீதியில் எழுந்தருளி மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பத்தியுலாத்தி பின் கொலுச்சாவடி சேர்த்தியாகும்.நவ.,19 மாலை 6:00 மணிக்கு அம்மன் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி ஆடி வீதியில் வலம் வருகிறார். நவ.,20 மாலை 6:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஆடி வீதியில் புறப்பாடு நடக்கும்.நவ.,15 முதல் 21 வரை நடக்கும் கந்த சஷ்டி விழாவில் நவ.,21 அன்று காலை 7:00 மணிக்கு கூடல்குமாரருக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படியாகி அபிேஷகம் நடக்கும். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், நிர்வாக அதிகாரி செல்லத்துரை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !