அஷ்டலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக 7ம் ஆண்டு விழா
ADDED :1885 days ago
திருபுவனை : மிட்டாமண்டகப்பட்டு அஷ்டலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக 7ம் ஆண்டு பூர்த்தி விழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி காலை 9.30 மணிக்கு கோ பூஜையும், 10.00 மணிக்கு கலச ஸ்தாபனம், அங்குரார்ப்பனம், கலசபூஜை மற்றும் விசேஷ ேஹாமங்கள் நடந்தது. தொடர்ந்து காலை 11.00 மணிக்கு மகா அபிஷேகமும், 11.30 மணிக்கு கடம் புறப்பாடும், 11.45 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகள் மகா அபிஷேகம் மற்றும் முகா தீபாராதனை நடந்தது. பகல் 12.00 மணிக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.விழாவில் மிட்டாமண்டகப்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் தனி நபர் இடைவெளியை கடைபிடித்து சுவாமியை தரிசனம் செய்தனர்.