ஹிந்து கோவில்களின் சொத்துகளை பாதுகாக்க முதல்வருக்கு கடிதம்
ADDED :1808 days ago
கரூர்: ஹிந்து மத கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பூசாரிகள் முன்னேற்ற சங்க நிறுவன தலைவர் சதீஷ் கண்ணன், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் உள்ளதாவது: தமிழக அரசு சமீபத்திய அறிக்கை எண், 318-ன்படி, ஹிந்து மத கோவிலுக்கு சொந்தமான இடங்களில், குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோவில்களுக்கு பக்தர்கள் தானமாக வழங்கிய, அனைத்து பொருட்களையும், திருக்கோவில் பராமரிப்பு பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். உயர்நீதிமன்ற தடை உத்தரவை மதித்து, திருக்கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை, தானமாகவோ அல்லது பட்டா வழங்குவதையோ தவிர்த்து, ஹிந்து மத கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் உள்ளது.