உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மனுக்கு இனிப்பு வகைகளில் அலங்காரம்

மாசாணியம்மனுக்கு இனிப்பு வகைகளில் அலங்காரம்

குன்னுார்: குன்னூர் மாசாணியம்மன் கோவிலில் தீபாவளியையொட்டி 150 கிலோ இனிப்பு வகைகளில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

குன்னூர் மாடல் ஹவுஸ் பகுதியில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோவிலில் தீபாவளியையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடந்தன. இதில் 150 கிலோ அளவில் லட்டு முறுக்கு அதிரசம் பால்கோவா உள்ளிட்ட பல்வேறு இனிப்பு வகைகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்று வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சுதர்சன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !