உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

பழநியில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

பழநி : வசந்தோற்சவம் என, அழைக்கப்படும் வைகாசி விசாக விழா, பழநியில் கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் இரவு, பெரியநாயகி அம்மன் கோயிலில் கிராம சாந்தி, வாஸ்து சாந்தி நடந்தது. நேற்று முத்துக்குமார சுவாமி சன்னதியில் கலசங்கள் வைத்து மயூர யாகம், சுவாமி, வள்ளி, தெய்வானை அபிஷேகம், காப்புக்கட்டுதல் நடந்தது. கொடிப்படம் பட்டத்து விநாயகர் கோயிலில் இருந்து புறப்பட்டு, பெரியநாயகி அம்மன் கோயில் சுற்றி, மண்டபம் வந்தடைந்தது. வாத்ய பூஜையுடன் காலை 10 மணிக்கு கொடியேற்றப்பட்டது. மலைக்கோயில், திருஆவினன்குடி கோயிலில் உச்சிக்காலத்தில் காப்புக் கட்டப்பட்டது. வசந்த காலத்தில் வருவதால் இவ்விழா "வசந்தோற்சவம் என அழைக்கப்படுகிறது. சுவாமி புறப்பாடின் போது வசந்த மாலை அணிவிக்கப்படும். விழாவின் 10 நாட்களுக்கும் யாகசாலை பூஜை நடக்கும். ஆறாம் நாளான ஜூன் 2 ல், திருக்கல்யாணம் நடக்கிறது. மறுநாள் வைகாசி விசாகம்; அன்று அதிகாலை 4 மணிக்கு மலைக்கோயில் சன்னதி திறக்கப்படும். மாலை 4.20 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !