தீர்ந்தது சந்தேகம்
ADDED :1800 days ago
பகுத்தறிவுவாதி ஒருவர், ‘‘ ஆண்டவர் இருப்பதை நான் நம்பவில்லை. ஏன் தெரியுமா? கண்ணால் காணாத ஒன்றை எப்படி நம்புவது?’’ எனக் கேட்டார்.
‘‘இருதயம் துடிப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?’’ என்று கேட்டார் ஆத்திகர்.
‘‘ பார்த்ததில்லை’’ என்றார்.
‘‘இருதயத்துடிப்பை உணர்ந்திருக்கிறீர்களா?’’
‘‘ஆம்...என் நெஞ்சில் கை வைக்கும் போது உணர்ந்திருக்கிறேன்’’
‘‘அதுபோலத்தான் ஆண்டவரை நாம் காண்பதில்லை. ஆனால் மனதால் உணர முடியும்’’ என்றார்.
வாயடைத்து நின்றார் பகுத்தறிவுவாதி.