உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி பிரசாதம் தபாலில் வழங்க ஏற்பாடு

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி பிரசாதம் தபாலில் வழங்க ஏற்பாடு

 காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில், சனிப்பெயர்ச்சி பிரசாரத்தை தபால் மூலம் பக்தர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது

இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுசேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வர கோவிலில் இன்று அதிகாலை, 5.22 மணிக்கு நடைபெற்ற சனிப் பெயர்ச்சி விழாவிற்கு பங்கேற்க (https://thirunallarutemple.org/sanipayarchi) என்ற தேவஸ்தான இணைய ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் அனைவருக்கும் சனிப்பெயர்ச்சி தினத்தன்று விஷேசமாக அவர்களது பெயர், ராசி நட்சத்திரத்திற்கு சங்கல்பம் செய்து அபிஷேகம் மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. பிரசாதங்களை பக்தர்களின் முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !