அகத்தீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி ஆராதனை
ADDED :1948 days ago
சென்னை: திருவொற்றியூர் அகத்தீஸ்வரர் கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு, சனிப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடுகளும் நவக்கிரக ஹோமங்களும் நடைபெற்றது.
சனீஸ்வர பகவான் இன்று காலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகரராசிக்கு பிரவேசித்தார். இந்த சனிப்பெயர்ச்சியை முன்னிட்ட, அகத்தீஸ்வரர் கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பரிகாரஹோமம், அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இன்று அதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி, அனுக்ஞை, சங்கல்பம், கணபதிஹோமம், நவகிரகஹோமம், திலஹோமம் நடைபெற்றது. இந்த வழிபாட்டையும் பூஜையை பக்தர்கள் https://www.youtube.com/watch?v=lO3QnO_aino இணையதளத்தின் வழியே நேரலையில் தரிசித்தனர்.