ஆன்மிகத்தில் வளர்ச்சி பெற விரும்புவோருக்கு...
ADDED :1821 days ago
ஆன்மா என்பது உயிரைக் குறிக்கும். உயிரைக் காக்க உதவுவது ஆன்மிகம். உயிர் செய்யும் பாவ, புண்ணியத்தைப் பொறுத்து அடுத்தபிறவியில் இன்பம், துன்ப அனுபவம் உண்டாகும். எனவே பாவச் செயல்களில் ஈடுபடாமல் வழிபாடு, தர்ம சிந்தனை, ஒழுக்கம் என நற்பண்புடன் வாழ்வது அவசியம். இந்த உண்மையை புரிந்து கொண்டால் ஆன்மிக வாழ்வில் உயரலாம்.