உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டுநாயக்கன்பட்டி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

காட்டுநாயக்கன்பட்டி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

தேனி: தேனி ஊராட்சி ஒன்றியம் காட்டுநாயக்கன்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பெருமாள் சுவாமி, ஸ்ரீ வீருநாகம்மாள் சுவாமி கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து நாள் முழுக்க பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை 9.05க்கு ஸ்ரீபெருமாள் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. 9.45 மணிக்கு ஸ்ரீ வீருநாகம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து திருமஞ்சனம், திருவாராதனை உட்பட நிகழ்ச்சிகள் நடந்தன. அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாநில ஒக்கலிக காப்புநல சங்க கௌரவ தலைவர் ஆறுமுகசுவாமி, மாநில தலைவர் வெள்ளியங்கிரி, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.டி.,கணேசன், கோயில் நிர்வாக தலைவர் ரமேஷ்பாபு, பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் தெய்வேந்திரன், தொழிலதிபர் வீரமணி, ஊஞ்சாம்பட்டி ஊராட்சி தலைவர் பிரகாஷ், வெங்கடாசலபுரம் தலைவர் அனந்தப்பன், தாடிச்சேரி தலைவர் தயாளன், ஊராட்சி ஒன்றிய தலைவர் அம்சகோமதி, மாவட்ட ஊராட்சி தலைவர் மகாலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !