குருவாயூர் கோவிலில் ரூ.3 கோடி காணிக்கை
ADDED :4879 days ago
குருவாயூர்: கேரளா, குருவாயூரில் பிரசித்திப் பெற்ற கிருஷ்ணன் கோவிலில், கடந்த மாதம் பக்தர்கள் காணிக்கையாக உண்டியல்களில் செலுத்திய ரொக்கம், தங்கம், வெள்ளிப் பொருட்கள் எண்ணப்பட்டன. இதில், ரொக்கமாக மூன்று கோடியே 63 லட்சத்து 56 ஆயிரத்து 845 ரூபாயும், 3 கிலோ மற்றும் 853 கிராம் எடை கொண்ட தங்க நகைகளும், 7 கிலோ மற்றும் 98 கிராம் வெள்ளிப் பொருட்களும் கிடைத்துள்ளன. உண்டியலில் கிடைத்த பொருட்களை மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள் எண்ணி, வங்கியில் செலுத்தினர்.