உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நாளை வைகாசி தேரோட்டம்!

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நாளை வைகாசி தேரோட்டம்!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழாவின் ஒன்பதாம் திருவிழாவான நாளை தேரோட்டம் நடக்கிறது. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அன்னதானம், சமயஉரை, கலைநிகழ்ச்சிகள், அம்மன் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலாவருதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. ஒன்பதாம் நாள் திருவிழாவான நாளை (2ம்தேதி) தேரோட்டம் நடக்கிறது. காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை அமைச்சர் பச்சைமால் துவக்கி வைக்கிறார். கன்னியாகுமரி டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும், மாலை 6 மணிக்கு மண்டகபடியும், இரவு 7.30க்கு பக்தி இன்னிசையும், 9க்கு அம்பாள் வெள்ளி கலைமான் வாகனத்தில் தேவி திருவீதி உலா வருதல் நடக்கிறது. ஆறாட்டு 10ம் நாள் திருவிழாவான 3ம் தேதி காலை 9.30க்கு அம்மன் ஆறாட்டுக்கு எழுந்தருளலும், மாலை 5 மணிக்கு மண்டகபடியும், 6க்கு சமயஉரையும், இரவு 8க்கு பக்தி இன்னிசையும், 9க்கு பூப்பந்தல் வாகனத்தில் தேவி திருவீதி உலா வருதலும், இரவு 9.30க்கு அம்மன் தெப்பத்திற்கு எழுந்தருளலும், இரவு 10.30க்கு ஆறாட்டு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் தொகுதி கண்காணிப்பாளர் ஸ்ரீ மூல வெங்கடேஷன், கன்னியாகுமரி கோயில் மேலாளர் கோணாசலம் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !