ராஜ யோக ஷீரடி சாய்பாபா கோயிலில் மண்டல பூஜை
ADDED :1753 days ago
கூடலுார் : லோயர்கேம்ப் பளியன்குடி மலையடிவாரத்தில் கட்டப்பட்ட ராஜ யோக ஷீரடி சாய்பாபா கோயில் 48 கால மண்டல பூஜை நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மங்களநாயகி கண்ணகிதேவி கோயில் பூசாரி கந்தவேல் செய்திருந்தார். மலையடிவாரத்தில் இயற்கையான சூழலில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு சாய்பாபா பக்தர்கள் அதிகம் வந்தபடி உள்ளனர்.