சமாதானம் செய்வோமா...
ADDED :1959 days ago
தேவைக்கு அதிகமாக உங்களிடம் பணம் இருந்தால் தர்மம் செய்யுங்கள். அதற்கு பணம் இல்லாத பட்சத்தில் தர்மம் செய்ய முடியாதே என வருந்த வேண்டாம். மனம் இருந்தால் வழி கிடைக்கும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் அவர்களை சமாதானம் செய்யுங்கள். தானம் செய்ததற்கான நன்மை கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள்...ஏன் உங்கள் வீட்டில் குழந்தைகள் கூட ஒருவருக்கொருவர் சண்டையிடலாம். அவர்களை மென்மையாக அணுகி அமைதிப்படுத்துங்கள். இது தர்மத்திற்கு ஒப்பாகும்.