உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வராகி அம்மன் கோயிலில் கலயங்களில் மஞ்சள் நீர் ஊர்வலம்

வராகி அம்மன் கோயிலில் கலயங்களில் மஞ்சள் நீர் ஊர்வலம்

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் 108 மண்கலயங்களில் பெண்கள் மஞ்சள் நீர் எடுத்து ஊர்வலமாக வந்தனர். நேற்று தை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலையில் 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. நேற்று மாலை 4:30 அளவில் கோயிலில் யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் 108 கலயங்களில் மஞ்சள் நீர் நிரப்பப்பட்டு உத்தரகோசமங்கை கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலம் வந்தது. பெண்கள் கொண்டு வந்த புனித நீரை வராகி அம்மனுக்கு அபிஷேகம் செய்து பூஜைகளை நிறைவேற்றினர். இரவில் உற்ஸவர் அம்மன் வீதி உலா நடந்தது. பூஜைகளை மங்கள பட்டர் செய்திருந்தார். திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் நந்தகுமார், பேஷ்கார் கண்ணன், ஜெய கார்த்திக், சரவணபாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !