கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் அக்னி பிரவேச வைபவம்
ADDED :1731 days ago
புதுச்சேரி; வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், 33ம் ஆண்டு அக்னி பிரவேச வைபவம் நடந்தது.புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் வீதியில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், ஆர்ய வைசிய யுவ ஜன சேவா சங்கம் சார்பில், 33ம் ஆண்டு அக்னி பிரவேச வைபவத்தையொட்டி, கடந்த 13ம் தேதி காலை 108 பால் குட ஊர்வலம், மகா அபிஷேகம் நடந்தது.இரவு 7:00 மணிக்கு, வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு, 40 வகையான 200 கிலோ மலர்களால், புஷ்ப யாகம் நடந்தது. யுவ ஜன சேவா சங்க தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ரமேஷ், செயலாளர் தினேஷ், பொருளாளர் செந்தில்முருகன் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.