துன்பம் வருவது ஏன்
ADDED :2000 days ago
சில நேரங்களில் இயற்கையால் மனிதன் அல்லல்படுகிறான். சுனாமி, நிலநடுக்கம், புயல், நோய் தொற்று என உலகம் துன்பத்திற்கு ஆளாகிறது. பல நேரங்களில் அலட்சிய புத்தியால் துன்பம் நேர்கிறது. ஆடம்பரம், முறையற்ற பழக்கம், திட்டமிடாமை, யோசனையின்றி செயல்படுதல் என பிரச்னைகளில் மனிதன் வலிய சிக்குகிறான். இதற்காக வருத்தப்படுவதோ, மற்றவரைக் குறை சொல்வதோ பயன் தராது. துன்பத்தால் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் வரப்போகும் நன்மைக்கான அச்சாரமே துன்பம் என்கிறது பைபிள்.
துயருறுவோர் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் ஆறுதல் கிடைக்கப் பெறுவர்.