திருவாடானை விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :4919 days ago
திருவாடானை: திருவாடானை அருகே கடம்பாகுடியில் செல்வ விநாயகர், உலகம்மாள், கருப்பர் கோயில்களின் கும்பாபிசேகம் நேற்று நடந்தது. நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள் நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கருடன் வானில் வட்டமிட செல்வ விநாயகர், உலகம்மாள் மற்றும் கருப்பர் கோயில் கும்பங்களில் புனித நீர் ஊற்றபட்டது. அமைச்சர்கள் கோகுலஇந்திரா, சுந்தரராஜ், மாவட்ட பஞ்., கவுன்சிலர் ஆணிமுத்து, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் கணேசன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.