உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்

திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் முன்னிட்டு நேற்று காலை 8:30 அளவில் கோயில் வளாகத்தில் கொடிமரத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி  நடந்தது. முன்னதாக மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம் சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடந்தது. வருகிற மார்ச் 28., காலை 9 மணிக்கு மேல் நான்கு ரத வீதிகளிலும் தேரோட்டம் நடக்கவுள்ளது.  ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !