கூத்தப்பாக்கத்தில் ராகவேந்திரர் சுவாமி அவதார திருவிழா
ADDED :1695 days ago
கடலுார் : கடலுார் அடுத்த கூத்தப்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரர் சுவாமி கோவிலில், அவரது 426வது அவதார தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது.இதனையொட்டி காலை ஹயக்ரீவ ேஹாமம், பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ராகவேந்திரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.புவனகிரிபுவனகிரியில் நடந்த ராகவேந்திரர் சுவாமியின் 426ஆம் ஆண்டு அவதார விழாவையொட்டி, சுவாமிக்கு நேற்று காலை பல்வேறு திரவியங்களால் அபிேஷக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.