காலாவதி கிடையாது
ADDED :1797 days ago
வெளிநாட்டவர் ஒருவர் பழநி மலையடிவாரத்தில் இரண்டு பாக்கெட் திருநீறு வாங்கினார். அதற்காக பத்து ரூபாய் கொடுத்த அவர் கடைக்காரரிடம், what is the expiry date? எனக் கேட்டார். அதற்கு கடைக்காரர் அமைதியுடன், ‘இதற்கு காலாவதியே கிடையாது. தினமும் நெற்றியில் பூசினால் தங்களின் காலாவதி தேதி நீட்டிக்கப்படும்’’ என்றார்.