உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பாபிஷேக விழா: புனித நீர் எடுத்து பெண்கள் வழிபாடு

கும்பாபிஷேக விழா: புனித நீர் எடுத்து பெண்கள் வழிபாடு

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே, கந்தர்மலை வேல்முருகன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, பெண்கள் குடங்களில் புனித நீருடன் சென்று வழிபாடு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்து சித்தர்கள் வாழும் கந்தர்மலை ஸ்ரீ வேல்முருகன் கோவிலில், திருப்பணி முடிந்து நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கோபுர கலசங்களில் நீர் விடுவதற்கு மற்றும் வேள்வி சாலை பூஜைகளில் வைப்பதற்காக ஆவத்தவாடி, சுண்டகாப்பட்டி, மோட்டூர்,கரகூர், கரியகவுண்டனூரை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட பெண்கள் தென்பெண்ணையாற்றிலிருந்து, குடங்களில் எடுத்த நீருடன் ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினர். பின்னர், கந்தர்மலை வேல்முருகன் கோவிலுக்கு புனித நீரை எடுத்து வந்தனர். நாளை காலை, 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !