ஊரடங்கு தினத்தில் பிள்ளையார் கோயில் திறப்பு
ADDED :1652 days ago
உசிலம்பட்டி: உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஊரடங்கு தினமான இன்று புதிதாக பிள்ளையார் கோயில் திறக்கப்பட்டது.
உசிலம்பட்டி மதுரை ரோட்டில் இருந்த தாலுகா அலுவலகம் இடப்பற்றாக்குறை காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு சீமானூத்து ரோட்டில் அனைத்து வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டது. கடந்த ஜன., யில் புதிய தாலுகா அலுவலக வளாகத்தில் பிள்ளையார் கோயில் கட்டுவதற்கான மேடை அமைத்தனர். தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டதால் கோயில் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு தினமான இன்று காலையில் வருவாய்த் துறை அலுவலர்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தி கோயிலை திறந்தனர்.