உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அந்தோணியார் குருசடியில் 108வது ஆண்டு விழா!

அந்தோணியார் குருசடியில் 108வது ஆண்டு விழா!

குன்னூர்: குன்னூர் சின்ன வண்டிசோலை புனித அந்தோணியார் குருசடியின் 108வது ஆண்டு விழா கோலாகலமாக நடந்தது. குன்னூர் பேரக்ஸ் சின்ன வண்டிசோலை புனித அந்தோணியார் குருசடியின் 108வது ஆண்டு விழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு நவநாள் நடந்தது. கடந்த 10ம் தேதி பகல் 11.30 மணிக்கு திருநாள் சிறப்பு திருப்பலி பங்கு தந்தை அருட்திரு பிரான்சிஸ் சேவியர் தலைமையில் நடந்தது.மதியம் அன்பின் விருந்தும், மாலை 6.30 மணிக்கு திருத்தேர் பவனி நடந்தது.  தேர்பவனி பேரக்சில் துவங்கி, ராணுவ மருத்துவமனை வழியாக தேவாலயம் வந்தடைந்தது. இதில்,ஏராளமான பங்கு மக்கள் பங்கேற்று சிலுவை மற்றும் பங்கு கொடிகளை ஏந்தி, பாடல்களை பாடி வந்தனர். விழாவிற்கான ஏற்பாடு களை பங்கு தந்தை மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !