கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டி சிறப்பு பூஜை
ADDED :1648 days ago
கீழக்கரை: கீழக்கரை அருகே புதுமாயாகுளத்தில் உள்ள வாழவந்தாள் மாரியம்மன் கோயிலில் சிறப்பு யாக வேள்வி நடந்தது. மூலவர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, திரவியப் பொடிகளால் 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. கொரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விரைவில் விடுபட வேண்டியும், உலக நன்மைக்காகவும் சிறப்பு வழிபாடு நடந்தது. கோயில் பூஜகர் பெரியசாமி பூஜை செய்தார். ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை தலைவர் முருகேசன் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.