ஊரடங்கை மீறி கும்பாபிஷேகம் முக்கியஸ்தர்கள் மீது வழக்கு
ADDED :1606 days ago
பெரம்பலுார், ஊரடங்கை மீறி கும்பாபிஷேகம் நடத்தியவர்கள் மீது, குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். பெரம்பலுார் மாவட்டம், வீரமாநல்லுார் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக கும்பாபிஷேகம் நடத்த போலீசார் அனுமதி வழங்கப்படாத நிலையில், தடையை மீறி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை நடத்திய கோவில் நிர்வாகி, கும்பாபிஷேகம் நடத்தி வைத்த அய்யர், கோவில் பூசாரி, இசைக்கலைஞர்கள் உள்பட ஐந்துக்கும் மேற்பட்டோர் மீது குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.