வேதகிரீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ராபிஷேகம்
ADDED :1627 days ago
புதுச்சேரி : புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவிலில் நடந்த அக்கினி நட்சத்திர தோஷம் மற்றும் கொரோனவைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாத்திட வேண்டி ஏகாதச ருத்ராபிஷேகம் சிறப்பு யாகம் நடந்தது. ருத்ராபிஷேகத்தில் மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது. கொரோனா கட்டுப்பாடு ஊரடங்கால் கோயில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.