யார் பாக்கியசாலி
ADDED :1710 days ago
பரந்து விரிந்த இந்த உலகத்தை இறைவன் உங்களிடம் ஒப்படைத்துள்ளான். நீங்கள் எவ்விதம் இதைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை சோதிக்கவும் விரும்புகிறான். எனவே உலகத்தையும், உலகப் பொருட்களையும் ஜாக்கிரதையாக பயன்படுத்துங்கள். பெண்களும் சோதனைப் பொருள்களில் ஒன்று என்பதால் அவர்களின் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். நற்செயல்கள் நிறைந்த பெண்களைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்யுங்கள். ஒழுக்கமும், பக்தியும் உள்ள வாழ்க்கைத்துணையை விட சிறந்த பாக்கியம் வேறில்லை. உங்களின் உறவினர்களில் நல்லொழுக்கம் உள்ள பெண் ஏழையாக இருப்பினும் திருமணம் செய்யுங்கள்.