கொரோனா வைரஸ் ஒழிய 108 மூலிகை யாகம்
ADDED :1606 days ago
பல்லடம்: சித்தம்பலத்தில், கொரோனா வைரஸ் ஒழிய வேண்டி, 108 மூலிகைகள் கொண்டு யாகம் நடந்தது.
பல்லடம் அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், கொரோனா வைரஸ் ஒழிய சிறப்பு வேள்வி வழிபாடு நடந்தது. காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் யாகத்தை துவக்கி வைத்தார். ஒழியட்டும் ஒழியட்டும், அழியட்டும் அழியட்டும் கொரோனா வைரஸ். சிவபெருமானின் திருவருள் செய்க என, விநாயகர், நவக்கிரகங்கள், மற்றும் சிவபெருமானுக்கு வழிபாடு நடந்தது. 108 சித்த மருத்துவ மூலிகைகள் கொண்டு இந்த யாகம் நடந்தது. நவக்கிரகங்கள், மற்றும் மூலவர் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகளும், இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் அருள்பாலித்தார்.