கோவில்களில் பணிபுரியும் 140 பேருக்கு அமைச்சர் கொரோனா நிதி வழங்கல்
ADDED :1670 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோவில்களில் பணிபுரியும் 140 பேருக்கு கொரோனா நிவாரணம் மற்றும் மளிகை தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தல் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., க்கள் செந்தில்குமார், மணிகண்ணன், புகழேந்தி, டி.ஆர்.ஓ., விஜய்பாபு முன்னிலை வகித்தனர். இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (பொறுப்பு) கஜேந்திரன் வரவேற்றார்.விழாவில், அமைச்சர் பொன்முடி, கோவில்களில் பணிபுரியும் 140 பேருக்கு தலா 4,000 ரூபாய், 10 கிலோ அரிசி மற்றும் மளிகை தொகுப்பை வழங்கி பேசினார்.இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் (பொறுப்பு) ஜான்சிராணி உட்பட பலர் பங்கேற்றனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் நன்றி கூறினார்.