உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதிசய ஊர் இது

அதிசய ஊர் இது


சொந்த விஷயமாக ஒரு ஊருக்குப் போயிருந்தார் முல்லா. உறைய வைக்கும் கடுங்குளிர் காலம் அது. வேலையை முடித்து விட்டு இரவில் தங்கியிருந்த விடுதிக்கு விரைந்து வந்த போது, வெறிநாய் ஒன்று முல்லை நோக்கி குரைக்க ஆரம்பித்தது. முல்லா நாயை விரட்டும் நோக்கில் கீழே குனிந்து கல்லை எடுத்தார்.  குளிரில் உறைந்த கல்லும் எடுக்க முடியாமல் தரையில் இறுகிக் கிடந்தது.
‘என்ன அதிசய ஊர் இது! கல்லைக் கட்டிப் போட்டு விட்டு, வெறிநாயை சுதந்திரமாக அலைய விட்டுள்ளனரே’ என மனதிற்குள்  சொல்லிக் கொண்டார் முல்லா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !