உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனி அமாவாசை: புனித தலங்களில் திதி கொடுத்து மக்கள் வழிபாடு

ஆனி அமாவாசை: புனித தலங்களில் திதி கொடுத்து மக்கள் வழிபாடு

ஆனி மாத அமாவாசையையொட்டி, திருவள்ளூர் வீரராகவர் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, தங்கள் பிதுர் கடனை செலுத்தினர்.

பெற்றோர்கள் வாழும் காலத்தில், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வது போல, அவர்களின் வாழ்க்கைக்கு பிறகும் நன்றிக்கடனை தொடர வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
அதற்காக, பிதுர்கடனை ஏற்படுத்தி வைத்து உள்ளனர். ஆனி அமாவாசை அன்று, முக்கிய புனித தலங்களில் மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவர். இந்த நாளில் தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும்; பித்ருக்களின் தோஷம் அகலும் என்பது ஐதீகம். சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் காலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். தெப்பக்குளத்தில் பழம், காய்கறிகள் படையல் வைத்தனர். புரோகிதர் மந்திரம் ஓத, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ஆனி அமாவாசையை முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !