உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனுஷ்கோடி ராமர் கோயிலுக்கு தடை: பக்தர்கள் ஏமாற்றம்

தனுஷ்கோடி ராமர் கோயிலுக்கு தடை: பக்தர்கள் ஏமாற்றம்

ராமேஸ்வரம் : தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலுக்கு செல்ல தடை விதித்ததால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஊரடங்கு தளர்வால் ஜூலை 5ல் தமிழகத்தில் அனைத்து கோவிலும் திறக்கப்பட்டது. தற்போது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல பகுதியில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு தரிசனம் செய்கின்றனர்.இதன்பின் தனுஷ்கோடி அருகே ஸ்ரீராமர், ராவணன் தம்பி விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டிய இடத்தில் கோதண்டராமர் கோயில் உள்ளது. ஜூலை 5 முதல் இக்கோயில் திறந்தும், தனுஷ்கோடி தேசிய சாலையை திறக்க போலீசார் தடை விதித்ததால், பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.எனவே போலீசார் சோதனை சாவடியை கோதண்டராமர் கோயில் முன் தேசிய சாலையில்அமைத்து, ராமர் கோயிலில் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !