உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா!

பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா!

பாகூர் : பாகூர் மூலநாதர் சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று பந்தக்கால் சுப முகூர்த்தம் நடந்தது.பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா, வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு மூலநாதர், வேதாம்பிகை அம்மன், விநாயகர், சுப்ரமணியர், சண்டீகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்குச் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 5.30 மணிக்கு பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. மாலை 6 மணிக்கு 1008 தாமரை மலர்களால் வேதாம்பிகை அம்மனுக்கு லலிதா சகஸ்கர நாம அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி பாலமுருகன், அர்ச்சகர்கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !