உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் மற்றும் தரிசனம்: போலீசார் டென்ட் அமைப்பு

சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் மற்றும் தரிசனம்: போலீசார் டென்ட் அமைப்பு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் மற்றும் தரிசன விழாவை நடத்த வேண்டுமென பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் போலீசார் டென்ட் அமைக்கின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முக்கிய விழாவான தேர் மற்றும் தரிசனம் நாளை நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் பங்கேற் பின்றி கோவிலுக்குள்ளகவே விழாவை நடத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் தேர் திருவிழாவை பொது மக்கள் பங்கேற்புடன் நடத்த வேண்டும் எனவும் தரிசன விழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மாலை கூட எம்எல்ஏ பாண்டியன் தலைமையில் கீழ வீதியில் சாலை மறியல் நடந்தது. இதன் காரணமாக எந்த நேரத்திலும் இது குறித்து பிரச்சினைகள் ஏற்படலாம் என காவல்துறை எனக்கு வந்த தகவலை அடுத்து திருப்பதி கோயில் வாயிலில் காவல் துறையினர் காக டென்ட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !