பெற்றோரை மகிழ்ச்சிபடுத்துங்கள்
ADDED :1634 days ago
ஒரு தாய் என்பவள் குழந்தைக்காக எத்தனை வலிகளை பொறுத்துக்கொள்கிறாள். ஆனால் தந்தைக்கோ குழந்தை வளரும் வரை வலிகளை பொறுப்பார். இப்படி நமக்காக வலிகளை தாங்கும் பெற்றோரை வேதனை செய்யலாமா...
* எத்தனை தொழுகை செய்தாலும் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதற்கு ஈடாகாது.
* பெற்றோர் உன் மீது கோபப்பட்டாலும் அவர்களிடம் அன்பு செலுத்துவது உனது கடமை.
* தாயை விட மனைவியை உயர்வாக கருதாதீர்கள்.
* தந்தையிடம் அன்பாக நடந்துகொள். இல்லாவிட்டால் உன்னுள் இருக்கும் ஒளியை இறைவன் போக்குவான்.
* பெற்றோருக்கு உதவும் பிள்ளைகளுக்கு வாழ்த்து உண்டாகட்டும்.