திருப்பதி பத்மவாதி கோயிலில் வரலட்சுமி விரதம் விமரிசை
ADDED :1594 days ago
திருப்பதி : வரலட்சுமி விரதம் என்றாலே அனைவருக்கும் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள பத்மாவதி தாயார்தான் நினைவிற்கு வருவார். அந்த அளவிற்கு வரலட்சுமி விரதம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கொரோனா காரணமாக இந்த வருடம் பக்தர்கள் யாரும் நேரில் அனுமதிக்கப்படவில்லை மாறாக கானொளி காட்சி மூலம் நேரிடையாக தரிசித்து மகிழ்ந்தனர். சர்வ அலங்காரத்துடன் வீற்றிருந்த பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த விழாவில் கோவில் அறங்காவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.