பத்திரகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா
ADDED :1526 days ago
பெரியபட்டினம்: பெரியபட்டிணம் அருகே இலங்காமணி கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. நேற்று மாலையில் முளைப்பாரி எடுத்துச் சென்ற பெண்கள் இலங்காமணி ஊரணியில் பாரியை கரைத்தனர். ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின்முறை நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.