பேச்சியம்மன் கோயில் புரவி எடுப்பு திருவிழா
ADDED :1519 days ago
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே நல்லுார் கிராமத்தில் உள்ள பேச்சியம்மன் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர். மேலக்கன்னிச்சேரி கிராமத்தில் தயார் செய்யப்பட்ட குதிரை, அய்யனார்,தவழும் பிள்ளை உருவத்தை ஊர்வலமாக கிராமமக்கள் எடுத்து வந்தனர்.பின்பு பேச்சியம்மன் கோயிலில் வைத்து குதிரை,தவழும் பிள்ளைகளுக்கு சிறப்பு அலங்காரம்,பூஜைகள் நடந்தது.