பார்த்தாலே பரவசம்
ADDED :1609 days ago
கடவுளை ஒளி வடிவில் வழிபடுவது ஞானிகளின் நிலை. ஆனால்நம்மை போன்ற எளிய மனிதர்களால் அப்படி வழி பட முடியாது என்பதால் தான் கிருஷ்ணராக அவதரித்தார் மகாவிஷ்ணு. மதுசூதன சரஸ்வதி என்னும் அருளாளர் கிருஷ்ணர் மீது ஆனந்த மந்தாகினி ஸ்தோத்திரம் பாடினார். இதில் " ஞானிகள் மனதை அடக்கி தங்களுக்குள் ஜோதி வடிவில் கடவுளை தரிசிப்பர். அதற்காக மற்றவர்கள் தவம் செய்ய முடியவில்லையே என வருந்த தேவையில்லை. அந்த ஜோதியே நீலமேனியுடன் கார்மேக வண்ணனாக கிருஷ்ணராக யமுனை நதிக்கரையில் ஓடி விளையாடியது. அவரை பார்த்தாலே மனம் பரவசப்படும். வளமான வாழ்வு, மோட்சம் கிடைக்கும் என்கிறார்.