திருப்பரங்குன்றத்தில் புதிய பல்லக்கில் சுவாமி புறப்பாடு
ADDED :1580 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு உபயமாக வழங்கப்பட்ட வெள்ளி பல்லக்கில் நேற்று கோயிலுக்குள் சுவாமி புறப்பாடு நடந்தது.
கந்த சஷ்டி திருவிழா நாட்களில் தினம் மாலையில் மர பல்லக்கில் கோயிலுக்குள் சுவாமி புறப்பாடு நடக்கும். இதற்காக ரூ. 8 லட்சம் மதிப்பிலான 11 கிலோ 720 கிராம் வெள்ளி, 18 கிலோ 361 கிராம் பித்தளை தகடுகள் பொருத்தப்பட்ட புதிய தேக்கு மரத்திலான பல்லக்கு கோயிலுக்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம் சார்பாக ஜூலையில் உபயமாக வழங்கப்பட்டது. அந்த பல்லக்கில் நேற்று சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கோயிலுக்குள் புறப்பாடாகினர்.